பிரசவத்திற்காக தேனி வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு பெங்களூரில் ஐ. டி யில் வேலை பார்த்து வரும் இளைஞர் தேனிக்கு வந்துள்ளார்.
ஆனால் குழந்தையும் மனைவியும் காண முடியாத படி கொரோனா சதி செய்தது. ஆம் அந்த இளைஞருக்கு கொராணா என்று தகவல் வந்துள்ளது.
இதனால் அவர் உத்தமபாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக தனியே வைக்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞரின் மனைவிக்கு கொராணா தொற்று உறுதி செய்யபட்டது. அவரின் மனைவி தன் குழந்தையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் அந்த இளைஞர் மருத்துவமனையின் இரண்டான் தளத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அங்கிருந்த மருத்துவர்கள் இளைஞருக்கு சிகிச்சை அளித்த போது அவரின் கையிலும் கழுத்திலும் கத்தி காயம் உள்ளது தெரியவந்துள்ளது.
காவலர்கள் விசாரணையில் தன் மனைவி குழந்தையை காண முடியாத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.
Suicide attempt by youth