சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பேரறிஞர் அண்ணாவின் கொள்ளுபேத்திக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

dmk-leader-stalin-congratulates-to-anna-grand-daughter
  அருண்   | Last Modified : 08 Aug, 2020 07:23 pm தமிழகம் பொது

சென்ற வருடம் 2019 இல் செப்டம்பர் மாதம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான சிவில் சர்விஸ் தேர்வு நடைபெற்றது.அந்த தேர்வை 829 நபர்கள் எழுதினர்.

இதனை தொடர்ந்து நேர்முக மற்றும் தனிநபர் தேர்வு  கடந்த பிப்ரவரி மற்றும் ஆஜெஸ்ட் மாதம் நடைபெற்றது அதன் முடிவுகள் 
 கடந்த 4 தேதி வெளியிடப்பட்டது.அதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளு பேத்தி  ப்ரிதிகா ராணி அவர்களும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேரறிஞர் அண்ணாவின் கொள்ளு பேத்தி  ப்ரிதிகா ராணி  வயது (23 ) கூறுகையில் “எனது முதல் விருப்பம் ஐ.எஃப்.எஸ். நான் எப்போதும் இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் இரு நாடுகளின் உறவுகளில் ஆர்வமாக உள்ளேன்,  மேலும் நான் ஐ.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறினார். மேலும் உலக அளவில் பெண்களின் உரிமைகள், சுகாதாரம் மற்றும் ஆரம்பக் கல்விக்காக பணியாற்றுவதில் ப்ரிதிகா ராணி  ஆர்வம் உள்ளார்.

இதை  அறிந்த திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், UPSC தேர்வில் வெற்றி பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளு பேத்தி ப்ரிதிகா ராணி அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பேரறிஞர் அண்ணா போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்து மடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.prithvika rani

 

DMK leader M.K. Stalin congratulated Prithvika Rani, the great-granddaughter of Anna, who won the UPSC exam, over the phone.