சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவு இன்று வெளியானது-தமிழக அரசு

கொரோனா வைரஸ்  தொற்று  பரவல்  காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது,மேலும் வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக  தேர்வு ரத்து செய்யப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி.  பொது தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

 கொரோனாவால் தேர்வு ரத்தான நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பொதுத்தேர்வு முடிவுகளை இன்று மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளியில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ்.  அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதில் பார்த்தும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர் 

மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 10 மணியில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுமாறு  அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்விதுறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

 மேலும் மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ந்தேதி வரை www.dge.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

Further, in case of any deficiency based on the score, it has been announced that the application can be submitted on www.dge.tn.gov.in from 17th to 25th August.