சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தனியார் வாகனங்களை வாடகை எடுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

தமிழகம்  முழுதும் அரசு  பஸ்கள் சேவை நோக்கில், பல கிராமகளிலும் ,நகரங்களிலும்  பஸ்கள் இயக்கப்படு வரும் சூழ்நிலையில்  லாபம் இல்லாமல் போக்குவரத்துக் கழகங்கள் இயங்குவதால்  அரசுக்கு  கூடுதல் நிதிச்சுமை மற்றும் கடன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை போன்ற  காரணகளால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு  அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் வாகனங்களை, வாடகைக்கு எடுத்து இயக்க முன்வந்துள்ளது. 

அதன் அடிப்படையில்  தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் 288ஏ என்ற பிரிவை திருத்தம் செய்யப்படு அதற்கான வரைவு அறிவிப்பு ஆணையை கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அன்று வெளியிடப்படத்தை தொடர்ந்து தனியார் வாகனகளை  வாடகைக்கு எடுக்க எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பத்தின் அடிப்படையில் பெர்மிட் வழங்கப்படும் இது தொடர்பாக அறிவிப்பு  கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த அறிவிப்புக்கு எந்தவொரு கருத்தும் ஆட்சேபனையும் தெரிவிக்கபடாததால் வரைவு அறிவிப்பு ஆணையை தமிழக அரசு உறுதி  செய்து புதிய அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சொந்தமாக வாகனங்கள் வாங்கி இயக்க முடியாத சூழலில், தனியாருக்கு சொந்தமான வாகனத்தை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு வாடகைக்கு எடுத்து பர்மிட்  உடன்   தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில்  இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 

Permission to rent a privately owned vehicle for a specified fee and operate on nationalised routes with a permit . Tamil Nadu Government Transport Corporations