சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தவர்களின் நிலைமை

the-situation-of-those-who-have-been-in-the-business-of-catching-snakes
  பிரேமா   | Last Modified : 16 Aug, 2020 01:43 pm தமிழகம் பொது

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக மென்பொருள் துறையில் வேலை செய்பவர்கள் ,கல்லூரி பேராசிரியர்கள் முதல் சிறுகுறு தொழில் செய்பவர்கள் வரை பலரும் தன் வேலையை இழந்துள்ள நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள வடநெம்மேலி பாம்பு பண்ணை மூடப்பட்ட காரணத்தால் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த பழங்குடி இருளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

இவர்களுக்கு நிவாரணம் உதவி செய்ய அரசு முன் வந்தால் இவர்கள் வாழ்வாதாரத்தை புதுப்பிக்க இயலும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் .தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வடநெம்மேலி என்னும் கிராமத்தில், தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருகிறது .

கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக பாம்புப்பண்ணை மூடப்பட்டதால் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த பழங்குடி இருளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாக கூறி அரசு உதவி கோரியுள்ளனர் .

Many people working in the software industry, from college professors to small business owners have lost their jobs due to the spread of the corona epidemic.