சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

5ரூபாய் டாக்டர் என அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் இறப்பால் சென்னை மக்களை ஆழ்த்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது முதல்வர், துணை முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

சென்னை வியாசர்பாடியில்  2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க துவங்கி   5 ரூபாய்க்கு மருத்துவம் சேவையை செய்துவந்த மருத்துவர் திருவேங்கடம் 70 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் காலமானார்.


இதனால் அப்பகுதி முழுவதும்  பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது .கொரோன தொற்றின் காரணமாக தனது சேவையை   செல்போன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கி 5ரூபாய் டாக்டர் என அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் திருவேங்கடம் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் வடசென்னை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்..

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் செய்தியில், 1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை    அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி! இரங்கலை தெரிவித்துள்ளார்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்!

எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் .
 

மேலும் அப்பகுதி மக்களும் மற்றும் இரங்கல் செய்தியை அறிந்த அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

5 Rupees Doctor Thiruvengadam passed away . deep condolence TNCM TNSUBCM and DMK Leader M.K.Stalin