சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள் முனைவர் சைலேந்திர பாபு . வீடியோவை பார்த்தா அசந்து போய்டுவிங்க.

முனைவர் சைலேந்திர பாபு அவர்கள் இளைஞர்களின் எழுச்சிநாயகன் மற்றும்   இளைஞர்களின் ஒரு முன் உதாரமானவரும் கூட ,  சூன் 5, 1962 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆகப் பணியைத் தொடங்கினார் 


உடற்பயிற்சியைத்  கடைபிடித்து வரும் இவர் உடலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'உடல்நலத் தகுதி' எனும் தமிழ் நூலை எழுதி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்போருக்கு விருந்தாக இந்த நூலைத் தந்துள்ளார். வீர தீர விளையாட்டுச் செயல்கலான நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் அதி தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் "RD சிங்" கோப்பையை பெற்றுள்ளார் என்பது மேலும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்.

பெப்ரவரி 2008 ஆம் ஆண்டில் இந்தியன் கடற்கரையோரப் பாதுகாப்பு படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு உறுப்பினர்களுடன் இணைந்து கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 890 கி. மீ சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்து அந்த பேரணியிலும் கலந்து கொண்ட இவர் 10 நாட்களாக நடந்த அந்த பேரணியில் கடலோரக் காவலர்களின் செயல்பாடு மற்றும் கடலோர மக்களின் மத்தியில் காவற்படையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயலாற்றி உள்ளார் . மேலும் துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்ட சைலேந்திர பாபு அவர்கள், காவல்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த துப்பாக்கிச்சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் .

இளைஞர்களின் வழிகாட்டி :
இளைஞர்கள், சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்புக் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை  பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்.

அதுபோன்று பல பொதுநல மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கெடுக்கும் இவர் , பொது   செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நல்ல விஷயங்களுக்கு முன்வந்து பாராட்டுவதும் இவரின் தனிப்பட்ட நற்குணமும் கூட .அதுபோன்று தற்போதைய கொரோன தொற்று காரணமாக பல விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் இவர் .

அதனை தொடர்ந்து பல நல்ல தகவல்களையும் தெரிவிப்பது இவரின் தனிப்பட்ட கூடுதல் சிறப்பாகும் அவற்றில் ஒரு சில தகவல் .

நண்பா, முதல் 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் அடுத்த 30 ஆண்டுகள்  சுலபமாக இருக்கும். Boy, If you slog the first 30 years of your life, the next 30 years will be easy.

 

நமது கடமைகளையும் பிறரின் உரிமைகளையும் உணர்ந்த நிலைதான் சுதந்திரம். Freedom is the state of realisation of others rights and our duty.

அதனை தொடர்ந்து அண்மையில் கண் பார்வை இல்லாமல் ஐ ஏ எஸ் தேர்ச்சி பெற்ற பூர்ணசுந்தரியை பாராட்டியும் உள்ளார்.

தோல்வி முடிவு அல்ல. முடியும்வரை போராடு. கண் பார்வை இல்லாமல் ஐ ஏ எஸ் தேர்ச்சி பெற்ற பூர்ணசுந்தரி பேசுவதைக் கேளுங்கள். Failure is not final. Listen to visually challenged Poornasundari who passed IAS exam.

அதுபோன்று தற்பொழுது தீயணைப்பு வீரர்கள், ஒருவர் தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய வீடியோ ஒன்றை பதிவிட்டு தீயணைப்பு வீரர்களை " உயிர் காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள் என்றும் இவர்களுக்கு தலைமை என்பதைவிட பெருமை என்ன இருக்க முடியும்? " என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார் .
 

உயிர் காக்கும் தீயணைப்பு வீரர்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களுக்கு தலைமை என்பதைவிட பெருமை என்ன இருக்க முடியும்? Firemen save our lives; they are the real heroes. It is a great honour to be their Director.

இவரை போன்று பேர் புகழை பெற்றும் சராசரி வாழ்கை வாழும் மனிதர்களை நாம் தேடிப்பிடித்து நன்றி தெரிவித்தால் இவரை போன்று இந்தநாட்டில் பலர் உருவாவர்கள்.

Firemen save our lives; they are the real heroes. It is a great honour to be their Director.Listen to visually challenged Poornasundari who passed IAS exam.C. Sylendra Babu