சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னையில் வசதியான குடும்ப பெண்களை பேஸ்புக் வழியாக குறிவைத்தவர் சிக்கியது எப்படி

சென்னையில் வசதியான குடும்ப பெண்களை குறிவைத்து முகநூல் வழியாக பழக்கம் எற்படுத்தி கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படியுள்ளது .

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது மனைவி ராக்கி கட்டோலயா அழகு நிலையம் நடத்தி வரும் இவருக்கும் சூளை பகுதியைச் சேர்ந்த திலீப் (28) என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் பிரவீண் கட்டலோயா வீட்டுக்கு திலீப் வந்து செல்வதும் குடும்ப உறுப்பினர்களிடம் நட்பாக பழகுவதும் ,அவர்கள் பாராட்டும் அளவிற்கு தன்னை ஈடுபடுத்தி வந்த திலீப் கஸ்டம்ஸில் வெளிநாட்டிலிருந்து ஐபோன் கலெக்சன் வருவதாகவும் அதனை கொண்டு தனியாக நாம் இருவரும் சேர்ந்து பிஸ்னஸ் தொடங்ககலாம் என்று  ராக்கி கட்டோலயாவிடம் கூறி அதற்கான முதலீட்டுக்கு தன்னால் பாதி பணம் மட்டும் தான் ஏற்பாடு செய்யமுடியும் என்றும் மீதிப் பணத்தை நீ தந்தால் தொழில் தொடங்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று  நம்பிய பிரவீண் கட்டலோயாவின் மனைவி ராக்கி கட்டோலயா ரூ 2,73,000 லட்ச்சம் ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்த பிரவீன் கட்டலோயா மற்றும் அவரது மனைவியும் இதுபற்றி  கேட்க, திலீப் நாட்களை  கடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து  திலீப் தனது மொபைல் நம்பரை மாற்றிவிட்டு தலைமறைவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனடிப்படையில்  வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அப் புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த திலீப்பை, போலீசார் வளைத்து பிடித்து  விசாரணை செய்தபோது பல வசதியான குடும்ப பெண்களை ஏமாற்றியது தெரிய வந்தது.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு திருவல்லிக்கேணியில் தங்கி ராயப்பேட்டையில் ஆடை நிறுவனம் வைத்திருக்கும் ரவீந்திரன் என்பவரின் அண்ணிக்கு பேஸ்புக் மூலமாக திலீப் பழக்கமாகி பழக்கமானது வீடுவரை வந்து செல்லும் அளவிற்கு நட்பாக மாறி  திலீப் வீட்டுக்கு வரும்பொழுது ரவீந்திரனின் வீட்டிலிருந்த 30 சவரன் நகையை திருடியுள்ளார் என்பதும் இதனை அப்போதே ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும்  வேலை வாங்கித்தருவதாக கூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏர்ஹோஸ்டஸ் மாணவி பிரியாவிடம் ரூபாய் 2.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் இதுகுறித்து  அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்று இருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திலீப்பிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏர்ஹோஸ்டஸ் படிக்கும் மாணவிகளிடம் மோசடி செய்வதற்காகவே தி.நகரிலுள்ள ஒரு தனியார் இன்ஸ்டிட்யூடில், திலீப் அந்த மாணவிகளுடன் சேர்ந்து படித்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் பிரியா என்ற மாணவியுடன் பழகி சென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண் வேலை ரெடி செய்துவிட்டதாகவும் கூறி ரூபாய் 2.50 லட்சம் பணம் வாங்கியதும் . இது போன்று பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்து உல்லாசமாகவும், சொகுசாகவும் வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 திலீப்பிடம் பேஸ்புக்கில் மயங்கிய ஐந்திற்கும் மேற்பட்ட வசதியான குடும்ப பெண்களும் வீழ்த்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.

குடும்ப நலனுக்காக கணவர்கள்  இரவு பகலும் பாராமல் உழைத்துக் கொண்டிருக்க, முன் பின் தெரியாத நபருடன் பேஸ்புக்கில் பழகி பழக்கம் நாளடைவில் தவறான பாதையில் செல்வதும்  அவர்களை வீட்டுக்கு வரவழைப்பதும்  லட்சங்களை அள்ளிக்கொடுப்பதும்  குடும்பத்தில் வீணான சச்சரவுகளுக்கு ஆளாக்கும் தம்பதியினரை இதில் தொடர்புடைய நபர்களை  போலீசார் அறிவுரை கூறி எச்சரித்துள்ளனர்.

How the man who targeted comfortable family women in Chennai via Facebook got caught