சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தினமணி செய்தியாளர் திரு. கார்த்திகேயன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

பிரபல தினமணி செய்தி நிறுவனத்தின்  செய்தியாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தினமணி நாளிதழ்  நிருபர் அ. கார்த்திகேயன்  அவர்கள்  சாலை விபத்தில் பரிதாபமாக  உயிரிழந்தார்.

தனது சொந்த வேலை நிமித்தமாக  திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்சி எம்ஐஇடி கல்லூரி அருகே சென்றுகொண்டு இருக்கும்பொழுது திடீர் என்று தன் மீது   லாரி வேகமாக மோதியதை தொடர்ந்து  அதே இடத்தில்  உடல் நசுங்கி கார்த்திகேயன் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து கார்த்திகேயன் அவர்களின் உடல் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படுள்ளது.

இதன் அடிப்படையில் நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து SP  வேலுமணி அவர்கள் தன்னுடைய ஆழ்த்த இரங்கலை தெரிவித்துள்ளார் .

புதுக்கோட்டை மாவட்ட தினமணி செய்தியாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்த துயர்மிகு சம்பவத்தால் வாடும் அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Pudukkottai District dinamani reporter Mr. Karthikeyan was died in a road accident