சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின் இரகசிய அறை

a-secret-room-behind-wall-mirror
  மீனா   | Last Modified : 20 Aug, 2020 08:39 pm தமிழகம் பொது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இருந்து உதகை செல்லும் பாதையில்  கல்லா ரயில்வே கேட் பகுதியில் உள்ளது "சரண்யா ரெசிடண்சி " என்னும் தனியார் விடுதி. 

இதில் பாலியல் தொழில் நடந்து வருவதாக தகவல் தெரியவந்து பல முறை காவலர்கள் சோதனைக்கு சென்ற போது அந்த மாதிரி எந்த ஒரு பாலியல் தொழிலும் நடந்தவாறு ஆதாரமும்,  குற்றவாளிகளும் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர் காவலர்கள். 

அதன் பின்னனி என்னவென்று இப்போது தெரியவந்துள்ளது.  ஆம் அந்த விடுதியில் கண்ணாடி ஒன்று வித்தியாசமான முறையில் வைத்திருக்கப்பட்டுள்ளது. 

அதனை திறந்தால் பின்னாடி ஓர் இரகசிய அறை இருக்கிறது. அந்த அறையில் தான் பாலியல் தொழில் நடந்து வந்துள்ளது.  காவலர்கள் சோதனைக்கு வந்த போதும் ஆட்கள் அந்த அறையில் தான் மறைந்து இருந்திருக்கிறார்கள். 

இதனை தற்போது அறிந்த காவலர்கள் மீண்டும் பரிசோதனை செய்ய சென்றனர். வெளியே பூட்டியிருந்த விடுதியை திறந்து காவலர்கள் உள்ளே சென்று அந்த கண்ணாடியை நகர்த்தியபோது தெரிந்தது அந்த இரகசியம்.  

விடுதியின் காப்பாளர்,  உரிமையாளர்,  ஒரு பெண் என 3 பேர் கைதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது இதில் உண்யை ஆகிற்று.

A secret room behind wall mirror