சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மது அருந்தி கும்மாளமிட்ட சிறுவர்கள், திரண்டு பிடித்த மக்கள்

youngsters-consumed-alcohol-people-surrender-them-to-police
  மீனா   | Last Modified : 21 Aug, 2020 12:01 pm தமிழகம் பொது

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குப்புச்சிபாளையம் அருகே முனியப்பன் கோயில் உள்ளது. 

அங்கு இருக்கும் வயல் காட்டுப்பகுதியில் ஊரடங்கு நேரத்தில் காமராஜபுரத்தை சேர்ந்த சிறுவர்கள் ஒன்று திரண்டு கறி சமைத்து சாப்பிட்டு,  மது அருந்தி கும்மாளமும் கூச்சலுமாய் இருந்திருக்கின்றனர். 

அங்கு வயலில் வேலை பார்த்த பெண்கள்  அவர்களை கண்டு பயந்தனர். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் காவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். 

காவலர்கள் வருவதற்கு தாமதமானதால் அந்த கிராம மக்களே அவர்களை சுற்றி வளைத்தனர்.  அந்த சிறுவர்கள் அந்த கிராம மக்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். 

அப்போது அங்கு வந்த காவலர்கள் சிறுவர்களை கடுமையாக கண்டித்து,  அவர்களின் பெயர் மற்றும் முகவரியை வாங்கிவிட்டு அவர்களை கண்டித்து அனுப்பினர். 

எதிர்கால சமூகம் எந்த வழியில் செல்கிறது என்பது நம் கண்கூட பார்த்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

Youngsters consumed alcohol & people surrender them to police