சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி, பெற்றோர் உயிரிழப்பு, பிள்ளைகள் தீவிர சிகிச்சை

because-of-loan-whole-family-tried-suicide-attempt-parents-died-but-children-are-in-serious-condition
  மீனா   | Last Modified : 21 Aug, 2020 06:01 pm தமிழகம் பொது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்தவர் சுப்பிரமணியம். விசைத்தறி தொழில் செய்து வரும் இவருக்கு மேனகா என்னும் ஓர் மனைவி மற்றும் மகன்,  மகள் என  இரு குழந்தைகளும் இருக்கின்றனர். 

தொழிலுக்காக அந்த பகுதியில் உள்ள ஐய்யாசாமி என்பவரிடம் கடன் வாங்கிய சுப்பிரமணியால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.  அதனால் ஐய்யாசாமி தகாத வார்த்தைகளால் வீட்டு வாசலில் நின்று திட்டியுள்ளார். 

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மேனகா அரளி  விதையை அரைத்து பாலில் கலந்து தன் கணவருக்கும்,  தன் இரு பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் அதை அருந்தியுள்ளார். 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதில் சுப்பிரமணியம் மற்றும் மேனகா உயிரிழந்தனர் என்று தகவல் வந்துள்ளது.  இரு பிள்ளைகளும்  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடன் தொல்லையால் தற்கொலை செய்ததாக அவர்கள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Because of loan whole family tried suicide attempt, parents died but children are in serious condition