சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கிணற்றில் மிதந்த சாக்குப்பையில் 3 திருநங்கைகளின் உடல்கள்

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே திருநங்கைகளுக்கு என தனி  குடியிருப்புகள் உள்ளது அதில்  35  கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர்.அந்த  குடியிருப்புபகுதியில் வசித்து வரும் பவானி என்ற திருநங்கை சில நாட்களாக காணாமல் போய்விட்டார் எங்கு தேடியும் அவரை  காணவில்லை,bhavani

இந்த சூழ்நிலையில் அவருடன் அருகில் வசிக்கும்  குடியிருப்பு வாசிகள்,பவானி  நெருங்கிய தோழிகளான முருகன் மற்றும் அனுஷ்கா திருநகைகளின் வீட்டிற்கு  தான் அடிக்கடி சென்று வந்துள்ளார்,எனவே அங்கு சென்று பார்க்கலாம் என முடிவு செய்துள்ளனர், அவர்கள் இருவரும் மகாராஜா பகுதியில் வசித்து வருகின்றனர், ஆதலால் குடியிருப்பு  வாசிகள் சென்று அவர்கள் வீட்டில் பார்த்துள்ளனர்.anushka

அவர்கள் வீட்டில் ரத்த கரையாக இருந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர் 

அப்போது அவர்கள் போலீஸாரிடம் பவானி  ரிஷிகேஸ் என்பவரோடு பழகி வந்ததாகவும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும் பவனி கடைசியாக அவருடன் தான் சென்றார் எனவும் கூறியுள்ளனர்,இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார்,ரிஷிகேஸ் மற்றும் அவனது கூட்டாளி இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர் அப்போது அவர்கள் மூன்று பேரையும்  கொலை செய்து மகாராஜா பகுதியில் ஒரு வீட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ளனர். 

பிறகு போலீஸார் அங்கு சென்று பார்த்துள்ளனர் அனால் அங்கு கொலைசெய்யப்பட்டதாக  கூறிய உடல்கள் இல்லை, எனவே மீண்டும் போலீஸார் அவர்களை தீவிரமாக விசாரித்துள்ளனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு அவர்களை தாங்கள்  கொலை செய்ததாகவும்,மேலும் கொலை செய்த உடல்களை பாளையங்கோட்டை புறவழி சாலையில் உள்ள கிணற்றில் வீசிவிட்டதாகவும் கூறியுள்ளனர் .அதன் பிறகு போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு சாக்கு பையில் உடல்கள் கட்டப்பட்டு மிதந்து கொண்டு இருந்தது. அதை பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்,

உடல்களை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் அவர்கள் எதற்காக திருநங்கைகளை கொலைசெய்தனர்  என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The house has been covered in blood so the shocked residents have lodged a complaint with the nearby police station