நெல்லை மாவட்டம் குக்கரை குலம் ஆத்துபாலத்திற்கு அருகே ஓர் புதிய கைபேசி கடை திறப்பு விழா நடந்துள்ளது.
இந்த கடை 6வது கிளை என்பதால் 6 நாட்களுக்கு ரூ. 6 க்கு ஹெட்செட் மற்றும் டெம்பர் க்ளாஸ் வழங்கப்படும் என்று அறிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதற்கு இளைஞர்களின் கூட்டம் அலைமோதி சாலை வரை கூட்டம் வந்து நின்றது.
சம்பந்தப்பட்ட் மாவட்ட ஆட்சியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் சானிடைசர் உபயோகிப்பதை வழியுறித்தி, பல முறை காவலர்கள் கூறியும் அந்த கூட்டத்தில் உள்ள எவரும் அதை கவனிக்காமல் சலுகைகள் நிறைந்த அந்த கடையின் மேலே கவனம் செலுத்தினர்.
பின் காவலர்கள் அந்த கடையில் உள்ளவர்களை வெளியேத்தி, சமூக இடைவெளி, சானிடைசர் மற்றும் முக கவசம் போன்ற விதிமுறைகளை முறையாக பயன்படுத்தவில்லை என்று கூறி சீல் வைத்தனர். இன்னும் ஆறு நாட்களுக்கு இந்த கடை சீல் வைக்கப்பட்ட நிலையிலே இருத்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
கொரோனா காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட அறிவிப்பும் சலுகைகளும் தேவையற்ற கசப்புகளை தருகிறது என்பதே உண்மை.
Mobile shop announced some offers, due to that crowd created in road