சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல கைபேசி நிறுவனத்தின் கைபேசி தயாரிக்கும் ஆலயத்தில் இருந்து 12கோடி மதிப்புள்ள கைபேசிகள் கன்டெய்னர் லாரியில் ஏற்றுமதி செய்து மும்பைக்கு அனுப்பப்பட்டது.
ஆந்திரா எல்லையை தாண்டும் போது வேறு ஒரு லாரி வந்து அந்த கன்டெய்னர் லாரியை மறித்துள்ளது. அதிலிருந்து வந்த மர்ம நபர் கன்டெய்னர் லாரி ஓட்டுனரை துப்பாக்கி முனையில் மிரட்டி அந்த கன்டெய்னர் லாரியை கடத்தியுள்ளார்கள்.
தப்பித்து வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனர் நகரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் நகரி நெடுஞ்சாலை ஓரமாக ஓர் கன்டெய்னர் லாரி இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்தனர். அதே கன்டெயனர் லாரி தான் என்று ஓட்டுனரும் சொல்ல அதில் உள்ள கைபேசிகளை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. 12 கோடி மதிப்புள்ள கைபேசிகளை மொத்தமாக வேறு ஒரு லாரியில் மாற்றி கடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
திரைப்பட பாணியில் கொள்ளையடித்ததை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Cinema style mobile robbery with gun