சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தாயும் மகளும் காதலை தேடி செல்ல, தந்தை தற்கொலை செய்து கொள்ள, 15 வயது மகன் நிற்கதையாய் நிற்கும் நிலை

mother-and-daughter-went-out-for-their-affairs-father-attempted-suicide-15-year-old-son-alone-in-that-family
  மீனா   | Last Modified : 27 Aug, 2020 08:32 pm தமிழகம் பொது

டிக் டாக் செயிலியால் பலரின் வாழ்க்கை திசை மாறி சென்றுள்ளது.  டிக் டாக் தடை செய்த பின்பும் அதனால் வழி மாறியவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. 

திருப்பூரில் உள்ள பொம்மநாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் ரவி.  அவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும்,  17 வயது மகள் மற்றும் 15 வயது மகன் இருக்கிறார்கள். 

கனகவள்ளி ஒரு அழகு நிலையத்தில் வேலை பணிபுரிந்து வந்தார்.  அதே அழகு நிலையத்தில் தன் 17 வயது மகளையும் வேலைக்கு சேர்த்துள்ளார். 

இருவரும் டிக் டாக் செயிலியில் பல மணி நேரம் பொழுதை கழித்துள்ளனர். இந்த செய்தி ரவியின் காதுகளுக்கு எட்ட,  அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

ஆனாலும் இருவரும் சேர்ந்து மீண்டும் டிக் டாக் செய்து கொண்டுள்ளனர்.  அதில் தாயும் மகளும் டிக் டாக்கில் அறிகமுகமான நபர்களுடன் தனி தனியே காதல் வயப்பட்டுள்ளனர். 

பின் தாயும் மகளும் வீட்டை விட்டு வெளியேறி காதலை தேடி சென்றுள்ளனர்.  அவர்கள் ஈரோடில் இருப்பதாக செய்தி அறிந்த ரவி அவரின் மனைவியை தேடி சென்றுள்ளார். 

அவரை கண்டுபிடித்து தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.  ஆனால் மனைவி கனகவள்ளியோ அவரை காயப்படுத்தும் வார்த்தைகளால் திட்டி,  அவருடன்  வர மறுத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த ரவி தன் 15 வயது மகனை நினைத்து வருந்தி ஓர் கானோலி வெளியுட்டுள்ளார்.  அதில் தன் சகோதரிகள் தன் மகனை பார்த்துக்கொள்ளும்படியும்,  தன் மகனுக்காக தான் கொஞ்சம் பணம் சேர்த்துவைத்துள்ளதாகவும்,  தன் மனைவி தன்னுடன் வர மறுத்ததையும் கூறி வருந்தி பேசியுள்ளார். 

அதன் பின்னர் மன இறுக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார்.  தாயும் மகளும் காதலுக்கா சென்றுவிட,  தந்தை தற்கொலை செய்து கொள்ள..  நிற்கதையாய் நிற்கும்  15 வயது மகன்.

ரவியின் கடைசி கானோலியை சாட்சியாய் கொண்டு காவலர்கள் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

Mother and daughter went out for their affairs, father attempted suicide & 15 year old son alone in that family