சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வசந்தகுமார் அவர்களின் கண்முன்னே வந்து போகும் அவரின் வாழ்கை

vasanthakumar-biography
  பிரேமா   | Last Modified : 29 Aug, 2020 05:04 am தமிழகம் பொது

வசந்தகுமார்  அவர்கள் நாகர்கோவில் அருகே அகஸ்தீஸ்வரம் என்ற ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் .அவருக்கென்று எந்த பெரிய சொத்த்துக்களும் இல்லை .தந்தையின் உழைப்பில் பட்டப்படிப்பு மட்டுமே படிக்க சாத்தியமானது .பிறகு தனது சொந்த வருமானத்தில் தொலைதூர கல்லூரியில் பட்ட மேற்படிப்பு எம் .ஏ முடித்தார் .ஆனால் அவருக்கு அவர் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை .

பிழைப்புக்காக சென்னையை தேடி வந்த அவருக்கு வேலை எளிதில் கிடைத்து விடவில்லை .பிறகு வி .ஜி .பி லிமிடெட் என்ற இடத்தில் வேலைக்கு சேர்ந்தார் .அங்கு ஆரம்பகாலத்தில் அவர் கடிகாரங்களை துடைக்கவும் போன்ற பல பொருள்களை துடைத்து வைப்பதுமாக இருந்தார் .எந்த வேலையையும் துச்சமாக எண்ணாமல் செய்யும் தொழிலே தெய்வம் போன்று எண்ணி செய்தார் .அவருடைய நண்பர்கள் பலரும் படித்த படிப்பிற்கு பார்க்கின்ற வேலை இல்லை என்று அவருக்கு கூறினர் .அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்  இரவு , பகல் பாராமல் உழைத்தார் .8 ஆண்டுகள் சாதாரண ஊழியராக பணியாற்றி அயராது உழைத்தார் .பின்னர் படிப்படியாக கடையில் விற்பனையாளர் , கடை பொறுப்பாளர் ,மேலாளர் ஆக உயர்ந்தார் .

இவருக்கு நடிப்பிலும் ஆர்வம் இருந்த காரணத்தினால் வாஞ்சிநாதன் ஸ்டேஜ் ஒன்றை தொடங்கினர் .அதில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார் .அது மட்டும் அல்லாமல் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் தேச பக்தி மிக்கவராகவும் இருந்தார் .பள்ளிபயிலும் போது இருந்தே காங்கிரசில் ஆர்வம் கொண்டு காங்கிரஸ் கட்சியில்  சேர்ந்தார் .

பின்னர் சொந்தமாக ஒரு கடையை உருவாக்க வேண்டும் என்று  எண்ணி காத்திருந்தார் .அப்பொழுது தான் நண்பர் ஒருவர் தன்னுடைய பழைய கடையை ஆறுமாதத்திற்கு தந்துள்ளார் .அப்பொழுது இவர் முதன் முதலில் 1978 ம் ஆண்டு ஜூலை 16  ம் தேதி என்ன  எல்லாம் செய்யலாம் என்ற கணக்கு போட்டு வசந்த் & கோ என்ற சிறு கடையை ஆரம்பித்தார் .எதையும் தன்னால் முடியும் என்று எண்ணுபவர் அதை சாதித்து காட்ட கூடியவர் .முதன் முதலில் பாத்திரங்கள் மற்றும் மர தளபாடங்கள் கடையை ஆரம்பித்தார் .பின்னர் பீரோ,ரேடியோ போன்ற பல பொருள்களை தவணை முறையில் கொடுக்க ஆரம்பித்தார் .வங்கியில் கடன் வாங்கி தன் தவணை வியாபாரத்தை  விரிவு படுத்த தொடங்கினார் .

அப்பொழுது தான் தமிழ்நாட்டிற்கு  தொலைக்காட்சிகள் பெருமளவு வர தொடங்கின .சாலிடேர் தொலைக்காட்சி பெட்டிக்கு  எக்கச்சக்க விற்பனையை கொடுத்தார் .அதுபோன்று பல பொருள்களை தன் கடைக்கு அறிமுகம் செய்து பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்குமாறு பல்வேறு வித்தியாசங்களை புகுத்தினார்.பின்னர் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நம்பக தன்மையும், தன் கடையில் பொருள்கள் வாங்குபவருக்கு பல்வேறு சலுகைகளையும் ,பரிசு பொருள்களையும் அள்ளி தந்தார் .இதுவே வசந்த் & கோ நம்பகமான நிறுவனமாக உருவாக வழிவகுத்தது .

அதுமட்டும் அல்லாமல் முதன் முதலில்  ' சாப்பிட வாங்க ' காணொளியில் ' பொதிகை ' சேனலில் விருந்தினராக வர ஆரம்பித்தார் .பின்னர் அப்படியே மேலும் ,மேலும் பிரபலம் ஆனார் .அவருடைய மகனான விஜய் வசந்தை  ' நாடோடிகள் ' படத்தில் அறிமுக படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .இவ்வாறு பலமடங்கு தன் நிறுவனத்தை பெருக்கி தன் முகத்தை தன் நிறுவனத்திற்கு அடையாளமாக வைத்தவர் என்ற பெருமை இவரை சேரும் .இவ்வாறு தன் நிறுவனத்தை பலமடங்காக்கிய இவர் தற்போது பல இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக வாழ்கின்ற இவர் ,இந்த உலகத்தை விட்டு பிரிந்தது மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது .

Vasantha Kumar was born into an ordinary family in Agastheeswaram near Nagercoil. He had no major assets. He could only study for a degree in his father's labor. He later completed his MA in Distance College with his own income. But he did not get a job for his studies.