சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

101 வயது தாத்தா வர்மக்கலையால் செய்து வரும் அதிசயங்கள்

101-year-old-man-clears-a-number-of-diseases-in-varmakalai-method-treatment
  மீனா   | Last Modified : 07 Sep, 2020 09:46 am தமிழகம் பொது

தமிழ் மரபில் ஆயிரக்கணக்கான கலைகள் இருந்ததும்,  அது பல ஆழிந்த நிலையில் சில கலைகள் ஆங்காங்கே துளிரி கொண்டு வருவதும் அனைவரும் அறிந்த தகவலே. 

அதில் அரச காலம் முதல் பல விதமான போர் படைகள்,  தற்காப்பு கலைகள் இருந்து வந்தன்.  அதில் முக்கியமான ஒன்று வர்மக்கலை ஆகும். 

இந்த வர்மக்கலை என்பது மனித உடலில் உள்ள முக்கிய நரம்புகள்,  நாடிகள்,  உயிர் காக்கும் புள்ளிகளை மையமாக கொண்டு தன்னை காத்து கொல்ல பயன்படுத்தப்பட்ட கலை ஆகும். 

இதை தன்னை காத்து கொல்லும் கலையாக மட்டும் அல்லாமல் பல உயிர்களையும் பல நோய்களையும் காப்பாத்தும் மருத்துவ கலையும் கூட. 

இப்போது ஆங்கில மருத்துவ முறையே கையோங்கி இருந்தாலும் ஆங்காங்கே ஆயுர்வேதம்,  சித்தம்,  என பல்வேறு தமிழ் மரபு மருத்துவ சிகிச்சைகள் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் வர்மக்கலையும் ஒன்று ஆகும். 

அதை தன் தாத்தாவிடம் இருந்து பரபு வழியாக முறையாக கற்றுக்கொண்டு தன் 10 வயது முதல் இந்த மருத்துவத்தை செய்து வந்துள்ளார் 101 வயது முதியவர். 

சேலம் அருகே சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 101 வயது முதியவர்  முத்துசாமி. இவர் பல நோய்களுக்கு மருந்து இல்லாமல்,  ஊசி போடாமல்,  குலுகோஸ்கள் ஏத்தாமல்,  ஸ்கேன் மற்றும் ஈசிஜி போன்றவற்றை எடுக்காமல் வர்மக்கலை மருத்தவ சிகிச்சை மூலமாக பலரை குணபடுத்தி வருகிறார்.

இவரிடம் வெளி மாவட்ட ம்ற்றும் மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் வந்து இந்த முதியவரிடம் சிகிச்சை பெற்றுகொண்டு செல்கிறார்கள். 

நம் பாரம்பரிய கலைகள் அனைத்தும் எப்போதும் பலருக்கும் உதவும் நிலையிலேயே இருக்கும் என்பதற்கு ஓர் அரிய எடுத்துகாட்டாக இருக்கிறார் இந்த முதியவர்.

101 year old man clears a number of diseases in varmakalai method treatment