சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

காட்டுக்குள் இருக்கும் மாணவியை தேடி வந்து உதவும் அரசு அதிகாரிகள்

police-government-officers-helps-a-12th-standard-student-volunteerly
  மீனா   | Last Modified : 07 Sep, 2020 04:37 pm தமிழகம் பொது

புதுக்கோட்டை மாவட்டம் போரம்வடக்குபட்டியை சேர்ந்த சிறுமி சத்யா. 

உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்து உயிரிழந்த அப்பா,  மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா,  காட்டிற்கு நடுவே பத்துக்கு பத்து செம்மண் சுவர்,  கீத்து கொட்டாய் குடிசை வீடு , ஒரே ஒரு மின்சார விளக்கு , பொருளாதார சிக்கல்கள் இது தான் சத்யாவின் சூழ்நிலை. 

இவருக்கு ஆறுதலாய் இருந்தது அவரின் மூத்த சகோதரி மட்டும் தான்.  ஆசிரியர் உதவியுடன் அக்காவின் ஆறுதலுடன் 12ஆம் வகுப்பில் விடா முயற்சியுடன் போராடி படித்து 600க்கு 323 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். 

கல்லூரி சேர்க்கைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திக்கி தவித்த மாணவிக்கு கிடைத்த ஒரே கரம் மக்கள் பாதை என்ற தன்னார்வ அமைப்பு தான். 

ஆம் அவர்களை நாடி "ஒரே ஒரு மின்சார விளக்கு,  அதும் மழை பெய்தால் போட முடியாது ஏனென்றால் கீத்து குடிசை வீடு ஒழுகும்,  அந்த மழை நீர் பட்டு மின்சாரம் தாக்ககூடம் என்பதால் போட முடியாது.  மின் விளக்கின்றி படித்தேன்,  காட்டுக்குள் வீடு என்பதால் பல பாம்புகள் நடமாட்டம் அதிகம்,  படுக்கையில் இருந்து உயிரிழந்தார் அப்பா,  அம்மாவால் சரியாக பேச முடியாது, பாசம் கிடைக்காத அனாதையாக தான் வாழ்கிறேன் " என்று தன் நிலையை எடுத்துரைத்துள்ளார் சத்யா. 

உதவி செய்ய முடிவு செய்த மக்கள் பாதை அமைப்பு பலரிடம் இந்த செய்தியை கொண்டு சென்றனர். 

இதை அறிந்த புதுக்கோட்டை மாவட்டம் எஸ். பி. அவர்கள் திரு. பாலாஜி சரவணன் மாணவியை நேரில் சந்தித்து பல பரிசுகள் வழங்கி பாராட்டி, ஊக்குவித்தார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர் " விடா முயற்சியுடன் ஜெயிக்க நினைப்பவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்" என்றார் அவர். 

பின் மாநகராட்சி அதிகாரிகள் வந்து அரசு தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் மாணவியின் வீட்டிற்கு பட்டா வழங்கி,  வீடு கட்டி தருவதாக கூறியுள்ளனர். 

 இதை கண்டு மாணிவிக்கு மட்டுமல்ல நம் அனைவரின் கண்களும் 
ஆனந்த கண்ணீருடன் இருந்தது.

Police & government officers helps a 12th standard student volunteerly