சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ட்ரம் ரொட்டி செய்து அசத்தும் தமிழ் விவசாயி

drum-chappathi-made-by-tamilian-in-perambalur-district
  மீனா   | Last Modified : 10 Sep, 2020 08:55 pm தமிழகம் பொது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். 

இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.  வறுமையின் காரணமாக கையில் இருந்த நிலம் கைமாறி போனது. விவசாயமும் நம்பிக்கை தராமல் போனதால் குடும்பத்தை காக்க வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். 

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நாடு திரும்பி தன் குடும்பத்தை சந்தித்து வந்துள்ளார்.

அப்படி வந்த அவர் கொரோனா காரணத்தால் வீட்டிலே இருந்துவிட நேரிட்டுள்ளது. 

அப்போது அவர் அபுதாபியில் கற்றுக்கொண்ட ட்ரம் சப்பாத்தி என்ற ரொட்டியை வைத்து வியாபாரம் செய்ய தூண்டியுள்ளது வீட்டில் பொழுது போகாமல் இருந்த நேரங்கள்.

தன் குடும்பத்தார்களும் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தர,  வியாபாரத்தை துவங்கினார் அவர். 

அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வரவேற்பும்,  வாடிக்கையாளர்களும் வந்து குவிந்துள்ளனர். 

ட்ரம் ஒன்று படுக்க வைத்து அதனுள் விறகுக் கட்டைகளை அடுக்கி பற்ற வைத்து ,  எண்ணெய் இல்லாமல் பெரிதாக ரொட்டி தேய்த்து அதை ட்ரம் சூட்டில் வேகவைத்து தரப்படுகிறது இந்த ட்ரம் சப்பாத்தி. ஒரு ஆளுக்கு ஒரு சப்பாத்தி சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். 

இது அபுதாபியில் தான் பிரபலமான உணவு ஆகும்.  தான் கஷ்டபட்டு கற்றுக்கொண்ட இந்த உணவு முறையை மூலாதாரமாக வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள கோழி கறி குருமா,  கோழி கறி வறுவல் மற்றும் சால்னா குருமா செய்து வருகிறார்கள். இதனால் 15 கிராமங்கள் வரை இவர்களின் புகழ் எட்டி வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.  சிலர் கைபேசி மூலம் ஆர்டர் செய்து வந்து வாங்கி கொள்கிறார்கள். இளைஞர்களை ரொம்பவும் ஈர்த்துள்ளது இந்த ட்ரம் சப்பாத்தி. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இருக்க கூடிய இந்த கடைக்கு கூட்டம் அலைமோத ஆரம்பம் ஆனது .

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடும் அப்பாவை தன்னோடு முழுநாளும் இனி வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்கிறதை,  இருக்கப்போவதை எண்ணி ஆனந்த கண்ணீர் பொங்க உதட்டில் சிரிப்பை கொண்டுள்ளார் அவரின் மகள்.

Drum chappathi made by tamilian in perambalur district