சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மனைவி உயிரிழந்து 30 நாட்களில் தன் வீட்டில் மனைவி அமர்ந்திருப்பது போல் உருவ சிலை

within-30-days-of-wife-s-funeral-husband-makes-his-wife-statue-as-sitting-position-in-home
  மீனா   | Last Modified : 14 Sep, 2020 06:55 pm தமிழகம் பொது

மதுரை மேலைபொந்நகரம் என்ற  பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் தாய் மூகாம்பிகை சேதுராமன் ஆவார். 

இவரின் மனைவி  பிச்சைமணி உயிரிழந்து 30 நாட்கள் ஆகிறது.  மனைவியை  மறக்க முடியாமல் தவித்தார் சேதுராமன்.  தன் உடல் பாதி உயிர் பாதியாய் வாழ்ந்த துணை சட்டென்று இல்லாமல் போனது தன் வாழ்க்கைக்கு வெறுமையாய் எண்ணினார். 

அதனால் அவர் எப்போதும் வீட்டில் இருப்பது போல் அவரது உருவ சிலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

மதுரை வில்லாபுரத்தை  சேர்ந்த ஓவியர் மருது மற்றும்  சிற்பி பிரசன்னா அவர்களை சந்தித்து தன் விருப்பத்தையும் தன் மனைவியின் மேல் தான் கொண்ட காதலையும் எடுத்துரைத்து தனக்கு தன் மனைவியின் சிலை செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். 

அதன்படி சிற்பி மற்றும் ஓவியர் இருவரும் இணைந்து செயல்பட்டு சேதுராமன் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஃபைபர் உபயோகித்து  சேதுராமன் மனைவி  அச்சு அசலாக பிச்சைமணி போலவே 6 அடி உருவம் வீட்டில் அமர்ந்திருப்பது போல செய்து உள்ளனர்.  

மனைவி இறந்த 30 நாட்களில் அவரின் உருவ சிலையை தன் வீட்டுற்கு கொண்டுவந்தார் சேதுராமன். 

உற்றார் உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் என அனைவரும் பிச்சைமணி சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். 

மனைவியின் மேல் பாசமும் அன்பும் காதலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே இப்படி செய்ய தூண்டும் என பலரும் சேதுராமன் - பிச்சைமணி தம்பதியினரின் காதலை புகழ்ந்து வருகின்றனர்.

Within 30 days of wife's funeral husband makes his wife statue as sitting position in home