சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நீட் தேர்வினால் ஏற்படும் தற்கொலைகள்

suicides-caused-by-neet-exam
  பிரேமா   | Last Modified : 13 Sep, 2020 01:42 pm தமிழகம் பொது

மருத்துவம் எவ்வளவு அத்தியாவசியம் என்பது அனைவரும் அறிந்ததே .அப்படிப்பட்ட மருத்துவத்தை படிப்பதற்கு அரசு பள்ளியில் படிக்கும் குழைந்தைகள் முதல் பல லட்சங்கள் கொட்டி  கொடுக்கும் தனியார் பள்ளிகள் வரையில் மருத்துவம் படிக்க ஏராளமானோர் நல்ல மதிப்பெண்களை பெற்று வெளி வந்தனர் . ஆனாலும் மருத்துவ படிப்பு என்பது ஏழைகளுக்கும் ,அரசு பள்ளியில் படித்து வெளிவருபவர்களுக்கு எட்டாத கனியாகவே இன்றளவும் இருந்து வருகிறது .

மருத்துவ படிப்பிற்காக பல ஏழை மக்கள் கொல்லப்பட்டும் ,தற்கொலை செய்து கொண்டும் வருகின்றனர் .இந்த நிலை மாற பல தன்னார்வ தொண்டர்களும் , சினிமா நட்சத்திரங்களும் தங்கள் கருத்துக்களை பதிவீட்டு வருகின்றனர் .

முன்பெல்லாம் நுழைவு தேர்வு மட்டுமே இருந்து வந்தது அது அனைத்து தரப்பினரும் எழுதும் வகையில் இருந்தது .பல்வேறு ஏழை மாணவர்கள் ,மாணவிகள் எப்படியாவது தங்கள் வாழ்க்கையில் முன்னேறி மருத்துவத்துறையில் செல்ல வேண்டும் என்று நினைத்த போது நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளால் தோல்வியை தழுவிகின்றனர் .அது மட்டும் அல்லாமல் நீட் தேர்வால் ஏற்படும் தோல்விகளை எதிர்கொள்ளமுடியாமல் சிலர் தற்கொலை செய்து   கொள்வது மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது .

நீட் தேர்வானது   அனிதா ,பிரதிபா ,விக்னேஷ் மற்றும் ஜோதி துர்கா என பலரையும்  தற்கொலைக்கு தள்ளப்பட்டது .நீட் தேர்வில் கேட்கப்படும் சமமற்ற தன்மை கொண்ட கேள்விகளால் நீட் தேர்வு நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது  .தமிழ் நாட்டில் என்னதான் சமசீர்  கல்விமுறை அறிமுகப்படுத்த பட்டாலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நிலையும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலையும் வேறு வேறு என்பது அனைவரும் அறிந்தது .

அதுமட்டும் அல்லாமல் மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வு போல் அல்லாமல் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு கட்டாயம் பயிற்சி வகுப்பிற்கு சென்றால் மட்டுமே அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் ,ஏழை குழந்தைகளும் வெற்றி பெற முடியும் .அதற்கான கட்டணமும் அவர்களால் கொடுக்க முடியாததால் அவர்களால் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடிவதில்லை .

ஏழை மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு காமராஜர் அவர்கள் காலம் முதல் இலவச சத்து உணவு ,இலவச சீறுவடை ,இலவச பேருந்து அனுமதி  ,இலவச மிதிவண்டி ,இலவச கணினி என பல்வேறு சலுகைகளை கொடுத்து வந்தாலும் இப்பொழுது இந்த நீட் தேர்வால் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது .

ஆனாலும் 2020 இல் கடந்த மார்ச் மதம் முதல் கொரோனா தொற்றுநோய் காரணத்தால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு இணையவழி வகுப்புகளே தொடர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு 10 வகுப்பு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் தடைப்பட்டன.ஆனால் கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது நீட் தேர்வு அறிவிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் மாணவிகள் முகக்கவசம் ,கையுறை அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் .இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தங்கள் கருத்துக்களை பரிமாறியும் வருகின்றனர் .

Everyone knows the importance of medicine. Yet medical education continues to be an unattainable fruit for the poor and those in public school students.