சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பெற்ற தாயை தொட்டு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நிலை

covid-patient-s-mother-died-he-can-t-able-touch-her-at-last-minute
  மீனா   | Last Modified : 14 Sep, 2020 06:58 pm தமிழகம் பொது

திருப்பத்தூர் மாவட்டம் வானியம்பாடி பகுதியில் உள்ள பாப்பாநேரி என்ற பகுதியை சேர்ந்தவர் மின்னல் அவர்கள். 

இவருக்கு 75 வயது ஆகிறது.  திருப்பதி,  முருகேசன் என்று இரு மகன்கள்,   3 மகள்கள் என்று 5 பிள்ளைகள். 

மகள்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.   இளைய மகன் திருப்பதி அவர்கள்  ஆந்திரா மாநிலத்திற்கு  பணி புரிய சென்றுள்ளார். 

மூத்த மகனான முருகேசன்  அவர்கள் தான் அம்மாவுடன் சேர்ந்து இருந்துள்ளார். 

கடந்த 7 ஆண்டுகளாக மின்னல் அவர்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது .

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்  முருகேசன் அவர்களுக்கு கொராணா தொற்று வந்துள்ளதாகவும் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 

ஆனால் முருகேசனின் அன்னை தீடீரென உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.  கொரோனா காரணத்தால் முருகேசன் அவர்களை வெளியே அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ளார்கள் மருத்துவர்கள். 

தன் அன்னையை கடைசியாக ஒரு முறை பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று முருகேசன்  அவர்கள் மருத்துவர்களை கெஞ்சியுள்ளார். 

அவரின் கோரிக்கையை ஏற்று கொரானா  பாதுகாப்பு கவசத்துடன்,  தாயை பார்ப்பதோடு அவரை தொடுவது  எல்லாம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டார். 

பெற்ற தாயை தொட்டு கூட அஞ்சிலி செலுத்த முடியாமல் போனதையும் நினைத்து கவலைப்பட்டார் முருகேசன். 

கொரானா  பாதுகாப்பு உடையுடன் தாயை தொடாமல்  பார்த்து தன் இறுதி அஞ்சலியை செலுத்தினார் முருகேசன்

Covid patient's mother died, he can't able touch her at last minute