திருவள்ளூர் மாவட்டம் பொண்ணேரி அருகே கவரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வு நடைபெற்றது.
அங்கு வந்த மாணவ மாணவியர்களுள் ஒரு மாணவி தன் அசல் அடையாள அட்டையை வீட்டிலே விட்டு வந்ததது தெரிய வந்தது.
பதறிய மாணவியிடம் விசாரணை நடத்திய காவலர்கள் அந்த மாணவி புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
உடனே ஓர் காவலர் தன் இரு சக்கர வாகனத்தில் அந்த மாணவியின் அன்னையை ஏற்றிக்கொண்டு புரசைவாக்கத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்கு சென்று மாணவியின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு திருவள்ளுவர் வந்துள்ளனர்.
மாணவியும் நேரத்திற்கு தன் தேர்விற்கு செல்ல முடிந்துள்ளது.
மாணவிக்கு உதவிய காவலர்க்கு பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
Police officer helped one student who forgot her identity card in home itself for neet exam