வீட்டற்கு முன் ஓர் மரம் வளர்க்க வேண்டும் , அவரவர் வீட்டில் தங்களால் முடிந்த வரை நல்ல மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
கும்பகோணத்தில் அரண்மனை வீதியில் உள்ளவர் வெங்கடேசன் என்பவர். இவர் குடும்பம் தங்களது 3 தலைமுறைகளாக அந்த இடத்திலே வாழ்ந்து வருகின்றனர்.
நவீன முறையில் தங்களுக்கு ஓர் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணினார். தங்களது 3 தலைமுறைகளாக தங்களோடவே வளர்ந்து குடும்பத்தில் ஒருத்தராக வாழ்ந்துவரும் வேப்ப மரத்தை வெட்டவும் ஒதுக்கவும் மனமில்லாத வெங்கடேசன் மரத்திற்கு எந்த சேதமும் இல்லாமல் தன் வீட்டை கட்ட வேண்டும் என்று எண்ணினார்.
அவரது குடும்பமும் அதற்கு சரி என்று சொல்ல சுற்றி இருந்தவர்கள் அவர்களை மனம் மாற தூண்டியுள்ளார்கள். நவீன முறையில் வீடு அமைக்க மரம் தடையாய் இருக்கும். நல்லா இருக்காது என்று கூறியுள்ளார்கள். தன் முடிவில் உறுதியாய் இருந்த வெங்கடேசன் வீடு கட்டும் பொறியியாளர்களிடம் தன் விருப்பத்தை கூற , அவர்களும் அதனை ஒப்புக்கொண்டு எந்த வித சேதாரமும் மரத்துக்கு ஏற்படமால் மரத்தின் வளைவு சுளிவுக்கு ஏற்றார் போல் 2 அடுக்கு மாடி வீடு கட்டி தந்துள்ளார்கள்.
இந்த வீட்டின் அமைப்ப காணவே பலரும் வந்து போகிறார்கள். குடும்பத்தில் ஒருவராக பாத்த வேப்ப மரம் இன்று வீட்டிற்கு ஒருவராக ஆகிவிட்டது எண்ணி வெங்கடேசன் சந்தோஷத்தில் உள்ளார்.
வெங்கடேசன் அவர்களின் இயற்கையின் மீதான காதலை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
A man build his home without damage the neem tree