திருப்பூரை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் - கௌசல்யா தம்பதிகள். இவர்களுக்கு ஜஸ்மத் என்று 3 வயதில் ஓர் ஆண் மகன் இருக்கிறான்.
அவனது 2 வயதில் கைபேசி பார்ப்பதை தவிர்க்க சில முயற்சிகள் எடுத்துள்ளார் அந்த தாய் கௌசல்யா அவர்கள்.
இந்திய நாட்டின் மாநிலத்தின் முதலமைச்சர்களின் பெயர்கள், முக்கிய தலைவர்களின் பெயர்கள் , 20க்கும் மேற்பட்ட திருக்குறள்கள் என்ற எல்லாவற்றையும் 40 வினாடிகளில் தனது மழலை மொழியால் கூறி எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் குழந்தைகள் கைபேசி மற்றும் தொலைக்காட்சிக்கு அடிமையாகி விடுகின்றனர். அதற்கு தாய் தந்தையர் இருவரும் வேலைக்கு செல்வது, பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் வயதானவர்களால் சமாளிக்க முடியாமல் போவது, வெளியே செல்ல முடியாமல் இருப்பது என்று பல காரணங்கள் உள்ளன. இதனை தாண்டி நம் குழந்தைகளை கைபேசி மற்றும் தொலைக்காட்சிகளிலிருந்து காப்பாற்றுவது என்பது மிக சவாலான பணி ஆகும்.
இதனை அழகாக கையாண்டு வரும் அந்த தாயாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
3 year old boy tells about 20 thirukkural