சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கேள்விபடாத ஒன்று.. பூனைக்கு வளைகாப்பா??

baby-shower-for-cat
  மீனா   | Last Modified : 17 Sep, 2020 07:46 pm தமிழகம் பொது

புதுச்சேரி மூலக்குலம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா என்பவர்.  இவர் வீட்டில் பேர குழந்தைகளோடு ஓர் பூனையை வளர்ந்து வந்தார். 

அந்த பூனை இப்போது கர்பமாக உள்ளது.  வளைகாப்பு என்னும் நிகழ்ச்சி கர்பமான பெண்களுக்கு நடத்தப்படும் ஓர் நல்ல நிகழ்ச்சி ஆகும்.  இதனை வசந்தாவின் பேர குழந்தைகள் தொலைக்காட்சியில்  பார்த்துவிட்டு தங்களது பூனைக்கும் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

அவர்களின் ஆசைக்கு இணங்க வசந்தா தன் வீட்டில் பூனைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். 

வழக்கமாக பெண்களுக்கு செய்யும் நிகழ்ச்சி போலவே பூனைக்கு மாலையிட்டு,  சந்தனம் குங்குமம் இட்டு,  வளையல் போட்டுவிட்டு கொண்டாடியுள்ளனர். 

குழந்தைகளின் உலகத்தில் எப்படி எல்லாம் புதிது புதிதாக ஆசைகளும்,  உணர்ச்சிகளும் இருக்கிறது என்பதும்,  அதனை உதாசீனம் செய்யாமல் ஏற்றுக்கொண்டு அதறை செயல்படுத்தியதையும் இணையத்தில் மிகவும் பாராட்டி வருகின்றனர்.

Baby shower for cat