சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

12 வயது சிறுவன் 90 ஆயிரம் ரூபாயயை அம்மாவிற்கு தெரியாமல் ஆன்லைன் விளையாட்டில் ஏமாந்துள்ளான்

12-year-old-age-boy-loss-90-thousands-rupees-from-mothers-debit-card
  மீனா   | Last Modified : 18 Sep, 2020 05:25 pm தமிழகம் பொது

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன் அம்மாவின் கைப்பேசியில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி உள்ளான். 

அதில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல பணம் செலுத்த வேண்டிய நிலை  வந்தவுடன் தன் அம்மாவிற்கு தெரியாமல் அவரது வங்கி டெபிட் கார்டு தகவலை இணைத்து பணம் செலுத்தி விளையாடியுள்ளான். 

அடுத்த அடுத்த கட்டத்திற்கும் அந்த நிலையை மேம்படுத்துவதற்கும் அந்த ஆன்லைன் விளையாட்டு நம் உத்தரவின்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வங்கி கார்டு மூலம் பணம் எடுத்துக்கொல்லும். 

இப்படி கடந்த 3 மாதமாக 90 ஆயிரம் ரூபாய் பணம் டெபிட் கார்டு மூலம் அந்த  ஆன்லைன் விளையாட்டு விளையாடி போய்விட்டது.  

இதனை அறிந்த அந்த தாயார்  தன் மகனுக்கு 1 முதல் 90 ஆயிரம் வரை எண்களை வரிசையாக எழுத வேண்டும் என்று தண்டனை கொடுத்துள்ளார். 

விளையாட்டு மட்டும் அல்ல  இணையத்தில் எந்த ஒரு இடத்திலும் தன் வங்கி சம்மந்தப்பட்ட தகவல்களை பதிவு செய்யும் போதும் அதன் விதிமுறைகளை ஒன்றுக்கு நான்கு தடவை சரி பார்த்து கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

இந்த மாதிரி மோசடிகளை காணும் போது பலருக்கும் பயமும் பதட்டும் ஏற்படுகிறது.

12 year old age boy loss 90 thousands rupees from. Mothers debit card