சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிறந்தநாள் நிகழ்ச்சியில் வெடித்த பலூன்கள்

சென்னை அம்பத்தூர் அருகே பாடி என்ற பகுதியில் ப. ஜ. க கட்சி விவசாய அணி தலைவர் தரி. முத்துராமன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேஸ் வாயு நிறைந்த பலூன்கள் மேலே பறக்க விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். 

அப்போது அங்கு விழாவிற்காக வெடிக்கப்பட்ட சரவெடியின் தீப்பொறி பலூன்களின் மீது பட, வாயு நிறைந்த பலூன்கள் அனைத்தும் ஒரு நேரத்தில் வெடித்தது. 

இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மேல் தீப்பொறிகள் சிதறியது.  பலர் சிறு காயங்களுடன் தப்பித்தனர். 

பொதுவாக பலூன்களில் ஹீலியம் வாயு ஏற்றுவர்,  ஹீலியம் விலை உயர்ந்தது என்பதல் சில சமயங்களில் ஹைட்ரஜன் நிரப்பப்படும்.  இதில் எது நிரப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 


இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி பெற வில்லை என்பதும்,  இந்த கூட்டத்திற்கு வெடி போன்ற ஆபத்தான பொருட்களை பொது இடங்களில் பயன்படுத்துவதற்காக எந்த ஒரு முன்னெச்சரிக்கையான பாதுக்காப்பு செயல்களும் ஏற்பாடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. 

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் திரு. பிரபகாரன்  மேலும் மற்றும் நிகழ்ச்சி விருந்தினர் திரு. முத்துராமன் மேலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Balloons blasted in birthday party