சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரே துப்பட்டாவில் கணவன்,மனைவி இருவருமே தற்கொலை

both-husband-and-wife-committed-suicide-in-the-same-drop
  India Border அருண் குமார்   | Last Modified : 19 Sep, 2020 10:15 pm தமிழகம் பொது

மயிலாடுதுறையை சேர்ந்த புதுமணத் தம்பதியினர் மணிகண்டன்(35),  ராதிகா(29). இவர்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவில் தனியார் குடியிருப்பில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் .

மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன நிறுவனத்தில் குவாலிட்டி மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா கீழ்பாக்கத்திலுள்ள உள்ள தனியார் ஃபைனான்சியல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்குள்ளும்  மனக்கசப்பு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மணிகண்டனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு முன்னதாக ராதிகா மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கிருந்து அவரது மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அவரது மனைவி போன் எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விவரத்தைக்கூறி தனது மனைவியை போனை எடுக்க சொல்லும்படி கூறியுள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் மணிகண்டன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராதிகா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.


தகவலறிந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது ராதிகா தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் அதே துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார்.

தகவலறிந்த அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

The husband also committed suicide because his wife committed suicide by hanging.