சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஜாதகம் பாக்கிற நபர்க்கே ஜாதகம் சரில்லை.

the-horoscope-does-not-apply-to-the-person-who-reads-the-horoscope
  India Border அருண் குமார்   | Last Modified : 20 Sep, 2020 01:38 pm தமிழகம் பொது

 கோவை காந்திபுரம் 7 வது வீதியில் பஞ்சரத்தினம் ஜெம்ஸ் என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் நடத்தி வருகின்ற கல்பனா இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்களது மகன் ரித்தீஷ் இவர்கள் செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகனுக்கு சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணிக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. கோவையில் திருமண வரவேற்பும் நடைபெற்றது.  திருமணத்தின் போது 2 கிலோ தங்க நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள், வைர நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டுள்ளது. மருமகள் அன்னப்பூரணி குடும்பத்தினர் வசதியானவர்கள் என்பதால்,  திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் கூடுதலாக வரதட்சிணையாக கார், வீடு, நகை வழங்க வேண்டும் என அன்னபூரணியை துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில்  அன்னபூரணிக்கு உடல்நிலையில் பிரச்சினை இருப்பதாக கூறி அவரை  சென்னைக்கு அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அன்னப்பூரணியை தொடர்பு கொள்ளவில்லை.பின்னர்  மே  8ஆம் தேதி அன்னப்பூரணி கோவைக்கு வந்து கணவரின் வீட்டிற்கு சென்றபோது, கணவர் ரித்திஷ், அவரது பெற்றோர் கல்பனா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கூடுதல் வரதட்சிணை இல்லாமல் வரக்கூடாது என கூறி வீட்டிற்குள் அனுமதிக்காமல்  திருப்பி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கணவருடன் சேர்ந்து வாழவைக்க கோரி அன்னப்பூரணி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையறிந்த ரித்தீஷ் மற்றும் அவரது பெற்றோர் அன்னப்பூரணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. ஒரு கோடி மதிப்பிலான கார், வீடு  ஆகியவை வாங்கி வராவிட்டால் சேர்த்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கவே அன்னப்பூரணி கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வந்ததால், கோவை மகளிர் நீதிமன்றத்தில் அன்னபூரணி வழக்கு தொடுத்தார். இந்த  வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் உடனடியாக புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யவும் உத்திரவிட்டது, இதனையடுத்து கடந்த செப்டம்பர் 10 ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாதேவி இதுகுறித்து வழக்கு பதிவு செய்தார். வரதட்சணை கேட்டு மிரட்டியதாக கணவர் ரித்தீஷ்,  அவரது பெற்றோர்  கல்பனா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், வரதட்சிணை கேட்டு துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குபதிவு செய்த தகவல் பொது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, ராசிக்கல் ஜோதிட நிலையம் செயல்படும் பகுதியில் பெண்ணின் உறவினர்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்

Relatives of the woman have posted notices in the area where the Zodiac Astrology Center is located so that the information about the case can be made public.