சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பெண்கள் குழந்தைகளுக்கு "கேடயம்"திட்டம் அறிமுகம்.

introducing-the-shield-program-for-girls-and-children
  India Border அருண் குமார்   | Last Modified : 23 Sep, 2020 09:17 pm தமிழகம் பொது

திருச்சி சரக காவல்துறை மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனும் இணைந்து, திருச்சி சரகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில்      "கேடயம்- SHIELD"  என்ற செயல்திட்டத்தை, திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

8 மாதங்களுக்கான இந்த திட்டத்தை  திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.ஜெயராமன் இ.கா.ப. அவர்களால் லோகோவை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

கேடயம் என்ற திட்டத்தின் செயல்பாடு பற்றி காவல்துறை துணைத்தலைவர் முனைவர். ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் பேசியபோது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி சரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச் செயல்களில் தரவுகளை சேகரித்து அதில் மிகக் தீவிரத்தன்மை கொண்ட 6 குற்றங்கள் கண்டறிவது மட்டுமல்லாமல் அதிக குற்றங்கள் நடைபெறும் 25 இடங்களை அடையாளம் காணப்படும் என்றும்,

மேலும் இக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பொது மக்களிடையே அச்சத்தை போக்க சமூகக் காவலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைத்து அவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியும் இதற்கான இரண்டு சிறப்பு உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 
CONT: 9384501999, 6383071800

திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர். ஆனி விஜயா இ.கா.ப. அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அவர்களுக்கு எதிராக குற்றம் நடக்காமல் தடுக்கவே பல துறைகள் இணைந்து "கேடயம்- SHIELD" திட்டங்கள் செயல்படுத்தப்படும் மேலும் இதுபோன்று அதிக குற்றம் நடைபெறும் 30 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

The "Shield" program will be implemented in collaboration with several departments to prevent crimes against women and children.