சென்னை வேளச்சேரியில் உள்ள காந்தி நகரில் 13 வயது சிறுமி தன் குடும்பத்தோடு வாழ்ந்தார்.
கடந்த ஜீன் மாதம் 14 ஆம் தேதி அந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட காரணம் விசாரணை நடந்து வருவதாக தகவல் தெரிவித்தனர் காவலர்கள். 3 மாதமாக விசாரணை நடத்தி தற்கொலைக்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.
சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 33 வயது குணசீலன் என்பவர் தான் அந்த சிறுமியை தினமும் பள்ளிக்கு கொண்டு விடுவதும், திரும்ப வீடு சேற்பதும். சிறுமியின் பெற்றோர் அந்த குணசீலனை சகோதரத்துவ மனசோடு இந்த காரியத்தை நம்பி செய்துள்ளனர்.
ஆனால் அந்த கொடுற குணசீலனோ அந்த சிறுமி தனிமையில் இருக்கும்போது எல்லாம் தன் சில்மிஷத்தை வெளிகாட்டியுள்ளான். அந்த சிறுமியை தகாத முறையில் காணோலியாக எடுத்து அதை காட்டி இணையத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டி அந்த சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
அதனை அந்த சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இந்த கொடுமை தாங்காத சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த சிறுமி தற்கொலை செய்த அன்று சிறுமியின். தாயாரின் கைபேசிக்கு "உன் அப்பா அம்மாவிடம் காட்டிவிடுவேன் " என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அது யார் அனுப்பியது என்று கண்டறிந்த காவலர்கள் குணசீலனை காண பக்கத்து வீட்டிற்கு சென்றனர்.
அந்த குணசீலனோ சிறுமி உயிரிழந்த அடுத்த 2 நாட்களில் வீடு மாறியுள்ளான். மறைந்திருந்த அவனை பிடித்து விசாரித்தனர் காவலர்கள். அவனோ தான் எந்த குறுச்செய்தியும் அனுப்பவே இல்லை என்று சாதிக்க, காவலர்கள் அவனின் கைபேசியை கைப்பற்றி சைபர் க்ரைம் துறைக்கு அனுப்பிவைத்தனர்.
மூன்று மாத போராட்டத்திற்கு பின் அந்த கைபேசியிலிருந்து அவன் அனுப்பி குறுச்செய்திகள், சிறுமியை அவன் எடுத்து வைத்திருந்த காணோலிகள் என்று அனைத்து கிடைத்தனர்.
பக்கத்து வீட்டாரை கூட நம்ப முடியாத அளவுக்கு மாறியுள்ளது காலம் என்பதை பலரால் ஏற்க முடியவில்லை எனினும் நாமே பாதுகாப்பாய் இருந்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.
Sexual harassment by neighbor, 13 year old girl suicided