சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மெல்லிசை குரலின் ராஜா மறைந்தார்.

the-king-of-music-disappeared
  India Border அருண் குமார்   | Last Modified : 25 Sep, 2020 02:37 pm தமிழகம் பொது

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74).  திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய அவருக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.


இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தியும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டார். இதற்கடுத்ததாக மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.

அப்போது அவர் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், எஸ்.பி.பி.யின் பாடல்கள் உள்ளவரை அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.
 

Singer SB Balasubramaniam who was treated at the hospital has passed away - SBP Charan