சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முறை கேடுகளில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களுக்கு கடிவாளம் - தமிழக அரசு அதிரடி

government-of-tamil-nadu-takes-action-against-ration-shop-employees-who-are-involved-in-harassment
  India Border அருண் குமார்   | Last Modified : 27 Sep, 2020 05:35 pm தமிழகம் பொது

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்குமாறு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் பொருட்களின் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது கூடுதல் இருப்பு காணப்பட்டால், ரேஷன் அட்டைதாரருக்கு தெரியாமல் கடைப்பணியாளர் போலி பட்டியல் தயாரித்ததாகவும், பொருள் விநியோகம் செய்யும்போது எடை குறைத்து கொடுத்ததாகவும் தான் கருத வேண்டும்.
உணவு பாதுகாப்புக்காக அதிக மானியத்துடன் வழங்கும் அத்தியாவசிய பொருட் களை உரியமுறையில் பயனாளிகளுக்கு வழங்காததும், எடைகுறைத்து விற்பது அல்லது போலிப் பட்டியல் வாயிலாக பொருட்களை திருடுவதும் தீவிர முறைகேடுகளாகும். இதனால்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் கூடுதல் இருப்பு நேர்கிறது. போலிப்பட்டியல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் திருடப்படும் குற்றம் போலவே இதுபோன்ற நேரத்திலும் அபராதத் தொகையை தொடர்ந்து வசூலிக்க உத்தரவிடப்படுகிறது.
அபராத தொகையை வட்டம் அல்லது மண்டல அலுவலர் உடனடியாக வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். போலி பட்டியலுக்கான அபராதத் தொகையை வசூலிக்க வழங்கப்பட்ட அதே நடைமுறை, பொருள் இருப்பு அதிகம் காணப்படும் இனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும், என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Tamil Nadu government has announced that fines will be levied on ration shop employees who have large stocks of goods