சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கோவையில் பகீர் தகவல்

அவிநாசியில் நடந்த அறிவால் வெட்டு சம்பத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் ஆள் கடத்தல் கும்பல் என பகிர் தகவல் தெரிய வந்துஉள்ளது. 
கடந்த, 23ம் தேதி இரவு,ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த தட்க்ஷிணாமூர்த்தி வயது 47  என்பவர் நண்பர்களுடன் காரில் அவிநாசி பைபாஸ் ரோடில் கொடுமுடி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியில், அவரது காரை வழி மறித்த, மற்றோரு காரில் வந்த சிலர், தட்க்ஷிணாமூர்த்தியின் கையை, அரிவாளால் வெட்டிவிட்டு, தலைமறைவாயினர்.
அவிநாசி போலீசார் நடத்திய விசாரணையில்,வாகனத்தை முந்திச் செல்வதில்,இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில்,இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு அவிநாசி, தெக்கலூர் அருகே செங்காளிப்பாளையம் பகுதியில்,போலீசார் ஒரு காரை சோதனை இட்டனர்.
காரில் வந்தவர்கள் திருப்பூர் ராயபுரத்தை சேர்த்த முகமது ஷாபி 29 ,மேற்கு பல்லடம் பகுதியைச் சேர்ந்த மனோஜ், 30 , திருப்பூர் கே.ன்.பி.,காலனியை சேர்ந்த மார்ஜிக்கு ,30 , என்பதும் , அரிவாளால் வெட்டிய கும்பல் ,இவர்கள்தான் என்பதும் ,தெரிவந்தது.அவர்கள்,தங்கள் காரில் கருமத்தப்பட்டியில் சேர்ந்த கார்த்திக் என்பவரை கடத்தி,பணம் பறிக்க கொண்டுசெல்வதும் தெரிவந்தது.தகவலின் அடிப்படியில்,கருமத்தப்பட்டி போலீசார் கார்த்திக்கை மீட்டுச்சென்றனர்.
போலீசார் கூறுகையில் கைதுசெய்யப்பட்ட கும்பல் ஆள் கடத்தில் ஈடுபட்டு,பணம் பறிப்பதை தொழிலாக கொண்டுஉள்ளது.முக்கிய குற்றவாளியான முகமது ஷாபி,மனோஜ் மீது பல்லடம் கோவை உள்ளிட்ட இடங்களில்,ஆள் கடத்தல்,பணம் பறித்தல்,கொள்ளை என 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்றனர்.மூவரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,சிறையில் அடைக்க பட்டனர்.

Three people have been arrested in connection with the Avinashi massacre.