கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நொச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் அவர்கள். இவருக்கு பிறவிலேயே கண் பார்வை தெரியாது.
இவர் தேங்காய் கொட்டாங்குச்சி, குடம், கேன், குச்சி போன்ற எளிய பொருட்களை கொண்டு நன்றாக இசை எழுப்பும் திறமை கொண்டவர். அதுமட்டுமல்லமால் திரைப்பட பாடல்களும் நன்கு பாடுவார்.
நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் உள்ள பிரபல பாடலான "கண்ணான கண்ணே " பாட்டை பாடி, அதை அவரது நண்பர்கள் காணொளியாக இணையத்தில் பதிவிட்டு பிரபலமாக பேசபட்டு வந்தார்.
இசை அமைப்பாளர் டி. இமான் அவர்கள் திருமுருகனுக்கு வாய்ப்பும் அளித்து அங்கீகரித்தார்.
கடந்த 6 மாத காலமாய் கொரானா காரணத்தால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார் திருமுருகன்.
ஆனால் கொரோனா அவரை விடவில்லை. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார் திருமுருகன் அவர்கள்.
அதனால் அவரை கொரானா சிகிச்சை மையத்தில் வைத்துள்ளனர். அங்கு சென்றவுடன் தான் ஆடாவிட்டால் தன் தசை ஆடும் என்பது போல் அங்கு இருக்கும் பொருட்களை கொண்டு இசை எழுப்பி, பாட்டு பாடி கொரானா நோயாளிகளை உற்சாக படுத்தி தானும் கொண்டாட்டமாய் இருந்தார் திருமுருகன் அவர்கள்.
கொரானா தொற்று சரியாகி அவர் வெளியே வந்த பிறகு அவரின் தேன் குரலை நாம் அனைவரும் கேட்கலாம் என்று பலர் இணையத்தில் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டு வருகின்றனர்.
Corona affected patient singer thirumurugan entertaining patients in corona treatment area