சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பாரம்பரிய கலையை இலவசமாக பயிற்சி அளிக்கும் முதியவர்

traditional-silambattam-game-is-trained-in-free-of-cost
  மீனா   | Last Modified : 01 Oct, 2020 10:38 am தமிழகம் பொது

தர்மபுரி அருகே அதியமான்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர் கிருஷ்ணன். இவர் நம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்டம் கலையை நன்கு அறிந்தவர். 

தான் கற்ற பாரம்பரிய கலையை இளைய தலைமுறைக்கு கற்று தர முடிவெடுத்து,  இலவசமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதனால் அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் அந்த முதியவருக்கு தனி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அவரை  பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம் " நம்ம பாரம்பரிய கலை என்னால் முடிந்த அளவு நம் இளைய தலைமுறைக்கா சொல்லி தந்தால்,  பின்னால் அவர்களும் நான்கு பேருக்கு சொல்லி தந்த நம் கலையை வளர்ப்பார்கள் " என்று பெருமையாய் கூறினார். 

இப்படிபட்ட குரு கிடைத்ததை எண்ணி மாணவர்களும் நெகிழ்ச்சியில் உள்ளனர்.  நம் கலையை விடாமல் செய்து வரும் அந்த குருவிற்கு பல பாராட்டுகள் தேடி வருகிறது.

Traditional silambattam game is trained in free of cost