சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குயில் பாட்டு பிடிக்காமல் குயிலை கொன்ற நபர்.

the-person-who-killed-the-quill-without-catching-the-quill-song
  India Border அருண் குமார்   | Last Modified : 04 Oct, 2020 10:54 am தமிழகம் பொது

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையத்தில் அம்பேத்கார்  தெருவில்  வசிக்கும் ஜார்ஜ் ஜோசப்,இவருக்கு பூர்விக வீடு மேட்டுப்பாளையம் மாதையில் உள்ளது.இந்த வீட்டில் அவரின் தயார் வசிப்பதால் வார இறுதில் ஜார்ஜ் ஜோசப் இங்கு வந்து தங்குவது வழக்கம்.இந்த வார விடுமுறையில் தயாரை பாக்க ஜார்ஜ்  வந்து உள்ளார்.

வீட்டில் அருகில் உள்ள மாமரத்தில் குயில் ஒன்று கூவி கொண்டு இருந்தது.ஜார்ஜ் குயிலை விரட்ட முயன்றார். ஆனால் குயில் மீண்டும் மீண்டும் அதே மரத்தில் அமர்ந்து கூவி கொண்டு இருந்தது. ஜார்ஜ்க்கு  குயிலின் பாட்டு காட்டு கத்தல் போல் இருந்து உள்ளது,இதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் தன்னிடம் இருந்த ஏர் கன் மூலம் குயிலை சுட்டு கொன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிக்களுக்கு புகார் அளித்தனர், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர், ஜார்ஜ்ஜை கைது செய்து, விசாரனையில் சேர்த்தனர் , விசாரனையில் குயிலை சுட்டு கொன்றதை ஒப்புக்கொன்றார்.

இதனை அடுத்து குயிலை சுட்டு கொன்றதுக்கா  ஜார்ஜ்க்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குயில் பாட்டு கூட பிடிக்காமல் சிலர் மனநெருக்கடியில் மனிதர்கள் உள்ளனர் என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்தியுள்ளது.

George was fined five thousand rupees for shooting the cave