ஈரோடு டீசல் செட்பகுதியில் 2 ஆம் தேதி அக்டோபர் 2020 இரவு 1 மணி அளவில் காளைமாடு ஒன்று ஆக்ரோசமாக வந்துள்ளது .
அக்டோபர் 2 2020 இரவு ஒரு மணி அளவில் காளைமாடு ஒன்று டீசல் செட்பகுதியில் கேட்ப்பாரற்று ஆக்ரோசமாக வந்தது அதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் காவியன் மற்றும் யுவராஜ் அவரது நண்பர்கள் இணைந்து அதை பிடித்து சாலையோரத்தில் கட்டி வைத்து விமல் கருப்பண்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் .
அதனை தொடர்ந்து எஸ்பி ஆபிஸ்க்கும் மற்றும் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளார் . அதன் அடிப்படையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 3 போலீசாரும் விசாரணை மேற்கொண்டு உரிமையாளர் கிடைத்தவுடன் ஒப்படைத்து விடலாம் என்று கூறியுள்ளார்கள் .
தற்பொழுது வரை உரிமையாளருக்கு யார் என்று தெரியவில்லை என்றும் விமல் கருப்பண்ணன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர்களின் நற்செயலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்
Kaviyan, Yuvraj and Vimal Karuppannan are the youths fighting for the bull in erode