சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மூதாட்டிக்கு வந்த மிக பெரும் சோதனை!

the-greatest-test-that-came-to-the-grandmother
  India Border அருண் குமார்   | Last Modified : 04 Oct, 2020 01:17 pm தமிழகம் பொது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 68 ,குடிசை வீட்டில்  வசித்து வருகிறார். இவர் இதுவரைக்கும் அதிக பட்சமாக மின்கட்டணமாக 40 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில காலமாக மின்கட்டணம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில் இவரது வீட்டுக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மீட்டரில் மின் பயன்பாடு குறித்து அளவு எடுத்தனர். அப்போது விட்டில் இருந்த சரஸ்வதியிடம்  ரூ.6 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதை கேட்டு அவர் ஷாக் ஆனார்.
ஏனெனில் மூதாட்டி தனது மகன், மருமகள், 3 பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 2 லைட் ,மற்றும் ஒரு பான்,அரசு வழங்கிய டிவி இது மட்டுமே உள்ளது. கிரைண்டர், மிக்சி,பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்களும் இல்லை. இருப்பினும், மின்கட்டணமாக இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறார்.மேலும் இது தொடர்பாக பலரிடம் புலம்கிறார்.
தமிழகத்தில் தற்போது மின்கட்டணம் தொடர்ந்து கூடுதலாக வருவதாக பலர் தெரிவித்து வந்தனர்.இதனால் இது பெரும் விவாத பொருளாகவே மாறி இருந்தது. இதுபோன்ற சூழலில் குடிசை வீட்டில் வசிக்கும் மூதாட்டி ரூ 6 ஆயிரம் மிகட்டணம் வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

The old lady living in the house has come with an overpayment of Rs. 6,000 which has caused a great stir among the people of the area