சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

விவசாயிகளுடன் போராட்டம் - கஞ்சா கருப்பு அறிவிப்பு

kanja-karuppu-stands-for-formers-problems
  மீனா   | Last Modified : 05 Oct, 2020 07:54 pm தமிழகம் பொது

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் என்ற கிராமத்திற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட  அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. அதே நேரத்தில் முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு தணணீர் திறந்து விடப்படும் என்றும் அறிவித்திருந்தனர். 

அதன்படி  நேற்று மதுரை மேலூருக்கு தண்ணீர் திறந்து 8 வது நாள் அன்று,  முதன் முதலாக ஒரு போக பாசன பகுதியான சிவகங்கை மாவட்டத்திற்கும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

தண்ணீர் திறந்த சில மணி நேரத்திலேயே தண்ணீர் மீண்டும் அடைக்கப்பட்டது. 

அந்த ஊரை சேர்ந்த  பிரபல சினிமா நடிகர் கஞ்சா கருப்பு அவர்கள் " இது அதிகாரிகளின் தப்பு. மதுரை மேலூர் மாதிரி சிவகங்கை மாவட்டத்திற்கும் 120 நாட்கள் வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் அனைவரையும் ஒன்று சேர்ந்து  போராடுவேன் " என்று செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார். 

விவசாயிகளின் பிரச்சினை தீர்க்க ஓர் வழி வேண்டும் என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Kanja karuppu stands for formers problems