கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் பிரபு வயது 34, இவர் தியாகதுருகம் தாய் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் பிரபு எம்.எல்.ஏ.வும் தியாகதுருகத்தை சேர்ந்த சவுந்தர்யா வயது 19, என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சவுந்தர்யா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுரியில் பி.ஏ.ஆங்கிலம் 2 -ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே சவுந்தர்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரபு எம்.எல்.ஏ. சவுந்தர்யா திருமணம் நேற்று அதிகாலை எளிமையான முறையில் நடைபெற்றது. தாய்நகரில் உள்ள எம்.எல்.ஏ.வின் இல்லத்தில் ஒன்றிய குழு முன்னாள் தலைவரும் எம்.எல்.ஏ.வின் தந்தையும் ஆன ஐயப்பா ஒன்றிய குழு, முன்னாள் துணைத்தலைவரும் எம்.எல்.ஏ.வின் தாயாருமான தைலம்மாள் ஆகியோர் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும்,நண்பர்களும், கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ.வின் வீட்டின் முன்பு குடத்தில் கொண்டு வந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ குளிக்க முயன்றார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடோடி சென்று அவரை தடுத்து நிறுத்தினர்.இது குறித்து வடத்தோரசலூர் கிராம நிர்வாக அலுவலர் காயத்திரி கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதன் தற்கொலைக்கு முயன்றதாக தாயகத்துருக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Prabhu, 34, a member of the Kallakurichi Assembly constituency, lives in the Thiyakathurugam Thai Nagar area.