சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் நகை, பணம் , கார் திருட்டு விசாரணையில் ஆடி போன போலிஸ்

police-search-for-isolated-home-jewelry-money-car-theft
  India Border அருண் குமார்   | Last Modified : 08 Oct, 2020 08:42 pm தமிழகம் பொது

சென்னை தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் 71 வயதான நூரில்ஹக், இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். மனைவி ஆயிஷா,வீட்டில் நூரில்ஹக் தம்பதி மற்றும் மனைவியின் அக்கா, அவரது கணவர் ரூபிள், இவர்களது மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்தனர். புதன்கிழமை மாலை நூரில் வீட்டிற்கு சென்ற மர்ம கும்பல் ஒன்று கையில் அரிவாளை காட்டி ஓட்டுனர் அப்பாஸை மிரட்டி கட்டிபோட்டனர்.

பின்னர் வீட்டிற்குள் நுழைந்து, நூரில் உள்ளிட்ட 5 பேரையும் தனித்தனி அறைகளில் கட்டிப் போட்டு விட்டு,  வீட்டில் இருந்த 250 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். வீட்டில் இருந்த ஹோண்டாசிட்டி காரையும் திருடிக் கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்திச் சென்று தியாகராயநகரில் உள்ள தனியார் துணிக்கடை வாசலில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து நூரில் ஹக் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வந்த நபர், நுாரில் மனைவியின் அக்கா கணவர் ரூபிளின் உறவினர் மைதீன் எனத் தெரியவந்தது. ரூபிளும், மைதீனும் உறவினர்கள்; இருவரும் இணைந்து தொழில் நடத்தி வந்த நிலையில் மைதீனிடம் ரூபிள், 40 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.அந்தக் கடனை ரூபிள் திருப்பித் தராத நிலையில், புதன்கிழமை அன்று மைதீன் சில நபர்களுடன் நுாரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரூபிள் உள்ளிட்வர்களுடன், முதலில் மைதீன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.அதில் பயன் கிடைக்காத நிலையில், அனைவரையும் கட்டிப் போட்டு நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். தூத்துக்குடியில் மைதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

It has been revealed that 250 shaving jewels were looted by relatives at the home of an elderly person who was being isolated by Corona.