சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

டிக்டாக் புகழ் தற்கொலை முயற்சி?

tic-tac-toe-suicide-attempt
  India Border அருண் குமார்   | Last Modified : 10 Oct, 2020 07:43 pm தமிழகம் பொது

இந்தியாவில் தடையில் உள்ள டிக்டாக் செயலியானது, தடைக்கு முன்னதாக மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. இந்த செயலியால் பலரும் இணையத்தில் வைரல் ஆனார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜி.பி முத்து. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்து, வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை சென்று பின்னர், எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வீடு திரும்பினார்.

டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜி.பி முத்து.

இந்த நிலையில், திடீரென அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜி.பி முத்துவிடம்  போலீசார், விசாரணை நடத்திய போது குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

GP Muthu Suicide Attempt - Admitted to Thiruchendur Government Hospital.