சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழ் மொழி பற்றிய முதல்வரின் கடிதம் - உடனடியாக ஏற்றது மத்திய அரசு

                உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனம் மிகவும் பிரபலமானது. இது மத்திய அரசின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். தற்போது இந்நிறுவனத்தில் தொல்லியல் சார்ந்த 2 ஆண்டு பட்டய படிப்பிற்க்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
                இந்த அறிவிப்பில் பட்டய படிப்பில் சேர விரும்புவோர்க்கான கல்வித்தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சமஸ்கிருதம், பாலி, அரபு போன்ற மொழிகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பில் தமிழ் மொழி இடம்பெறாததைக் கண்டு தமிழகத்தில் உள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள் மற்றும் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தன் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
                இதை கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதில் செம்மொழியான தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் தொல்லியல் படிப்பிற்க்கான தகுதிப் பட்டியலில் மற்ற மொழிகளோடு தமிழ் மொழியையும் இணைக்குமாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். 
                இக்கடிதம் கிடைக்க பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவு பிறப்பித்தார். தொல்லியல் படிப்பிற்க்கான தகுதிப் பட்டியலில் மற்ற மொழிகளோடு தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டதற்கான அறிவிப்பு அந்த கடிதத்தில் இருந்தது. பிரதமரின் இந்த உடனடி நடவடிக்கை மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
                தற்போது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் நம் செம்மொழியான தமிழ் மற்றும் ஓடியா, பராகிரித், அரபிக், பாரசீகம்  போன்ற மொழிகளும் உள்ளன.இதையொட்டி முதல்வர் அவர்கள் உடனடி உத்தரவு பிறப்பித்த பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றிக் கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

The Prime Minister of India ordered the immediate inclusion of the Chief Minister's letter requesting that the Classical Tamil language be declared eligible for admission to the Central Institute of Archeology.