சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

3 திருமணங்களை மறைத்து 4 -வது திருமணம் செய்த போலிஷ்காரர் மகன் கைது

son-of-4th-married-policeman-arrested-for-hiding-3-marriages
  India Border அருண் குமார்   | Last Modified : 11 Oct, 2020 11:15 am தமிழகம் பொது

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் திருச்சி ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்,வயது 26. இவர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகள் சுமதிக்கும் வயது 20, கடந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.திருமணத்துக்கு பின்னர் இருவரும் திருவெறும்பூர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து சுமதி கர்ப்பமானார். ஆனால் கர்ப்பத்தை கலைக்கும்படி கார்த்திக் கூறியுள்ளார். மேலும் சுமதி திருமணத்தின்போது போட்டு வந்த நகைகளை கார்த்திக் அடமானம் வைத்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.கணவர் மீது சந்தேகம் அடைந்த சுமதி, கணவரின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் சில பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. அதுபற்றி கார்த்திக்கிடம் விசாரித்தபோது, அவர் கூறிய தகவலை கேட்டு சுமதி அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் முதல் திருமணம் செய்துள்ளதும், பின்னர் சென்னையை சேர்ந்த வாணி என்ற பெண்ணை 2-வதாகவும், அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணை 3-வதாகவும் திருமணம் செய்ததாகவும், இவற்றை மறைத்து சுமதியை 4-வது திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.

மேலும், முதல் மனைவி ஸ்டெல்லாவிற்கு 3 வயது மகனும், 2-வது மனைவி வாணிக்கு 1½ வயது பெண் குழந்தையும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த சுமதி தனது தந்தை மூலம் போடிநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருமணம் நடைபெற்ற இடம் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கு லால்குடிக்கு மாற்றப்பட்டு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், 3 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து சுமதியை 4-வது திருமணம் செய்ததை கார்த்திக் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The son of a 4th married policeman who hid three marriages in Trichy has been arrested.