தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிளையில் ஓட்டுனராக பணி ஆற்றி வருகிறார் திரு. ரமேஷ் அவர்கள்.
நேற்று, அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி இரவு ரமேஷ் அவர்கள் தன் பணியை முடித்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
அறச்சலூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் கஸ்பாபேட்டை என்னும் இடத்தை திரு. ரமேஷ் அவர்கள் பயணிக்கும் போது, எதிரே அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் (கார் )ஒன்று ரமேஷ் அவர்களின் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் திரு. ரமேஷ் அவர்கள்.
விபத்து ஏற்பட காரணமாக இருந்த அந்த நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் 3 பேர் என்றும், அவர்கள் பயங்கர குடி போதையில் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
காவலர்கள் தீவர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Alcoholic persons traveled in a car, made a accident on government bus driver who traveled in his bike