கரூரில் ஒரு வயது குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சத்யா தனது ஒரு வயது குழந்தை டிஜய்க்கு செவித்திறன் குறைபாடு இருந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூர் நொய்யல் ஆற்றுப்பாலத்திற்கு வந்த அவர், தனது குழந்தையை ஆற்றில் வீசி விட்டு தானும் குதிக்க முயன்றார். அப்போது பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் ஏற முடியாததால் தான் எடுத்துவந்த, பிளேடால் தனது கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, ஆற்றில் வீசப்பட்ட குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Police are investigating an incident in which a mother tried to commit suicide by throwing an adult child into a river in Karur.