சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னையில் ATM யை உடைத்த வாலிபர் கைது

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் பிரபல தனியார் வங்கியின் ATM மையம் உள்ளது. நேற்று அதிகாலை ATM  மையத்துக்குள் புகுந்த மர்ம நபர், ATM  எந்திரத்தை உடைத்துக்கொண்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமனுக்கு தகவல் கொடுத்தனர்.

அவரது உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுகள் நந்தகோபால், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் ATM  மையத்தில் இருந்த வாலிபர் தப்பி ஓடமுயன்றார்.

அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பெரும்பாக்கம் எட்டுஅடுக்கு பகுதியை சேர்ந்த லாரன்ஸ்,வயது 28. என்பதும் இவர் ATM  எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து லாரன்சை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ATM  எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The ATM center of the famous private bank is located at Rajiv Gandhi Road, Durappakkam, next to Chennai. Neighbors informed Deputy Commissioner of Police Vikram that the mysterious person who broke into the ATM center early yesterday morning was breaking into the ATM machine.